பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2012


வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ மாநாட்டின் நோக்கமாகும்: ஜாதிக ஹெல உறுமய
இலங்கையில் தனி இராச்சியம் அமைக்கும் நோக்கிலேயே தமிழ் நாட்டின் தி.மு.க டெசோ மாநாட்டை நடாத்துகின்றது என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த மாநாடு தொடர்பில் இதுவரையில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை வெளியிடவில்லை. வடக்கு கிழக்கை ஒன்றிணைத்து, ஈழ இராச்சியத்தை அமைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.