பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2012

16 நாட்கள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள சிறிலங்காப் படையினரின் பாரிய இராணுவ ஒத்திகை
சிறிலங்காப் படையினர் சுமார் இரண்டாயிரம் பங்கேற்கும் கூட்டு இராணுவ ஒத்திகை ஒன்று மட்டக்களப்பு வாகரையில் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நீர்க்காகம்– lll – 2012 என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போர்ப்பயிற்சி எதிர்வரும் 10ம் நாள் தொடங்கி 25ம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சியில் சிறிலங்காவின் முப்படையினருடன் வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.