பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2012


கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்றது, யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களுடன் இரண்டாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தையும், ஐதேக 4 ஆசனங்களுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், ஆளும்கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்குமா அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐதேகவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.