பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2012


கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்
யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முற்பகல் 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கைதடி வளர்மதி கல்விக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த பஸ்ஸில் சென்றுள்ளனர்.பஸ் விகத்துக்குள்ளானதும், காயப்பட்ட 15 பேர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
ஏனையவர்கள் கைதடிக்குத் திரும்பிச் சென்றபோதும் அவர்களில் நான்குபேர் திடீர் சுகவீனமுற்றதனால் நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.