பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2012


மிழக முதலமைச்சர் ஜெயலலிதா 19ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புது தில்லி செல்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 19ம் தேதி கூட்டுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தின் 7வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 19ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புது தில்லி செல்கிறார்.

கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அன்று மாலையே அவர் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் என்று தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சருடன் முக்கிய அதிகாரிகளும் தில்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.