பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2012

கடைசி டி20: ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணியின் துடுப்பெடுத்தாட தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராப் நிகோல் ஓட்டங்கள் ஏதுமின்றியும், மார்டின் கப்தில் 1 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய மெக்கல்லம் 91 ஓட்டங்களும், வில்லியம்சன் 28 எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது.
அதன் பின் களமிறங்கிய இந்திய அணியில் கவுதம் கம்பீர் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அதிகபட்சமாக கோஹ்லி 70 ஓட்டங்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.