பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012

27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்
27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை அடுத்த மாதம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டார். 


அத்துடன் அப்பணிப்பெண்ணுக்கு எதிரான வழக்கின் பொலிஸ் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு வெள்ளவத்தை பொலிஸாருக்கு நீதவான் பணித்தார்.

அத்துடன் குறித்த பெண்ணைப் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கான அனுமதியை வழங்க தனக்கு அதிகாரமில்லை என நீதவான் குறிப்பிட்டார்.

சந்தேக நபரான குறித்த விமானப் பணிப்பெண்ணையும் சம்பவத்துடன் தொடர்புடையதான மற்றொரு நபரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.