பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2012

9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
டி20 உலக கிண்ண தொடரின் சூப்பர்-8 பிரிவில் இன்றைய போட்டியில், இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.
உலக கிண்ண டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 பிரிவில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்னர் 141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 14.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.