பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2012


இஸ்லாமை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை தயாரித்தவரை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உலகெங்கும் பெரும் கலவரங்களை உண்டாக்கிய இன்னஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தை தயாரித்த நகுலா பஸ்ஸெல்லி தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவர் ஏற்கனவே நிதி மோசடி வழக்கு ஒன்றுக்காக சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். நிபந்தனை ஜாமீனில் இருக்கும்போது அதிகாரிகள் முன்னிலையில்தான் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை மீறி இருப்பதால் அவரை மீண்டும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். 

அவர் மீது எட்டுப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். 

நகுலாவைக் கொன்றால் ஒரு லட்சம் டாலர்கள் தருவதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.