பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2012


முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக ஆயத்தம்?
கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதற்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுபவம் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சுப் பதவிகள் நிர்ணயிக்கப்படாவிட்டால், கட்சியிலிரந்து விலக நேரிடும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தெரிவான சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு பதவி வழங்காது, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு நெருக்கமான ஒருவருக்கு பதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்பட்டால் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.