பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2012


வடபகுதியில் பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுடன் கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர் சிசன்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கல் சிஸன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்போர், மீள் குடியேற்றப்பட்ட மக்கள் உட்பட அப்பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம் மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொடர்பான தகவல்களையும் அவர்களுடைய கலை, கலாசார, பண்பாடு உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்களையும் ஆராய்ந்து போதிய தகவல்களை பெற்றுள்ளதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்த இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் கொழும்புக்கு வெளியில் முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை வட மாகாணத்துக்கு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்துக்குச் சென்ற அவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்போர், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உட்பட அப்பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.