பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2012


கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வீ.சுரேஸ்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வீ.சுரேஸ்குமாருக்கு திருகோணமலை நீதவான் யூ
.எல்.ஏ.அஸார் பத்து இலட்ச ரூபா ரொக்கப் பிணையும் மேலும் பத்து இலட்ச ரூபா பெறுமதியான ஆறு சரீரப் பிணையையும் வழங்கினார்.

இருப்பினும் மற்றைய சந்தேக நபர்களான சட்டத்தரணி பீ.கரிகாலன், சுரேஸ்குமாரின் சகோதரன் பீ.சுதாகரன் ஆகியோர் தொடாந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.