பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2012


வடமத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 234387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 126184 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 104165 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 69943 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 19 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.