பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2012

 முஸ்லீம் காங்கிரஷஇன்றுஅம்பாறையில் கூடுகிறது- மந்திரி பதவிகளை பங்கு போடுவதில் குடும்பிச்சண்டை
மத்திய அரசியல் இரண்டு முழு மந்திரி பதவியும் மூன்று அரைமந்திரி பதவிகளும், மாகாண முதல்மந்திரி பதவியும் மாகாண பிரதான இரு மந்திரிகளும் தமக்கு தர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மகிந்த ராசபக்சவிடம் கோரியதற்கு அவர்
சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மந்திரி பதவிகளை பங்கு போடுவதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷிற்குள் குடும்பிச்சண்டை ஆரம்பித்துள்ளது.
இந்த குடும்பி சண்டையை தீர்த்து வைப்பதற்காக இன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் அம்பாறையில் கூடுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குதென நேற்று அலரிமாளிகையில் மகிந்த ராசபக்சவிடம் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மகிந்த ராசபக்ச தலையில் நடைபெற்ற போதே ரவூப் ஹக்கீம் தாங்கள் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத்தான் ஆதரவளிப்போம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்காகவும், தாம் தீர்மானிக்கும் சக்தி என காட்டுவதற்காகவும் தாம் முடிவு எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கூறிவந்தது.  இந்நிலையில் மந்திரி பதவிகள் பலவற்றை முஸ்லீம் காங்கிரஷிற்கு தருகிறோம் என மகிந்த ராசபக்ச கூறியதையடுத்து இப்போது குடும்பிச்சண்டை ஆரம்பமாகியுள்ளது.
இந்த குடும்பிச்சண்டையை தீர்ப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் இன்று அம்பாறையில் கூடுகிறது.