பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2012

சசிகலா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த 25ம் தேதி விசாரணையின் போது, பெங்களூரு கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.