பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2012


விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரால் கலவரம் :இந்து முன்னணி பிரமுகர் மண்டை உடைப்பு
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கலவரம் வெடித்தது.  தொண்டர் மண்டை உடைந்தது. 

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் விநாயகர் ஊர்வலம் நடப்பதாக இருந்தது.  குறிப்பிட்ட பகுதியில் பிள்ளையார் ஊர்வலம் செல்வதை மற்றொரு பிரிவினர் தடுத்தனர்.  இதனால் இன்று காலையில் இருந்தே நேதாஜி நகரில் இருந்து போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா இணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணைகமிஷனர்கள் அன்பு, மகேஷ்வரன்,லஷ்மி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சற்று முன்(23.9.2012 - மாலை 5.45) இதே பகுதியைச்சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஜெகன்(40) என்பவரின் மண்டை உடைக்கப்பட்டது.  இந்த மண்டை உடைப்புக்கு போலீஸ்தான் காரணம் என்றும் ,  மற்றொரு பிரிவினர்தான் காரணம் என்றும், மாறி மாறி குற்றம் சொல்லப்பட்டு வருகிறது.

இதனால் அந்த பகுதி பரபரப்பில் மூழ்கியது.  100க்கணக் கான போலீசாரை மீறி, பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.  இதில் ஏராளமான பெண்களும் அடங்குவர். 

இந்துமுன்னணியைச்சேர்ந்த இளைஞர்கள் தனியே சாலையில் அமர்ந்து கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.  நிலைமை கட்டுக்குள் மீறி போனதால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அதிகம் மக்கள் தொகை உள்ள நேதாஜி நகர் பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.

அனைத்து சாலை நுழைவிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளூக்கு திரும்பமுடியாமல் அச்சத்துடன் உள்ளனர்.