பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2012


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
 
மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார்.
 
அவரை அரசியலில் இறக்கும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வரலாம் என ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டுவந்த குடும்பம் என்ற வகையில் குறித்த செய்திகள் நம்பக்கூடிய வகையிலேயே உள்ளன.
 
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
 
அதேவகையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அரசியலில் நுழைய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.