பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2012



மு.க. ஸ்டாலின், உதயநிதி திஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
 
 முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


கடந்த 2008-ம் ஆண்டு தன்னிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்தை திருப்பி ஒப்படைக்காமல் உதயநிதி ஸ்டாலின் அபகரித்து விட்டதாகவும், அதனைத் திருப்பிக் கேட்டபோது உதயநிதியும், அவரது தந்தை ஸ்டாலினும் தன்னை மிரட்டியதாகவும் அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார்.


ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பு சம்மதத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனவே கோர்ட்டும் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீதான இந்த கிரிமினல் வழக்கை உயர் நீதிமன்றம் அழித்து விட்டதாகக் கூறிய தமிழக அரசு, இவ்வழக்கை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,   ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டுள்ளது.