பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2012



வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தாலும், அங்குள்ள முகாம்களை அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ம் திகதி இந்தியாவுக்கு சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த உள்ளனர்.

வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது, கிழக்கு மாகாண சபை அரசாங்கத்திடம் சென்றமை, முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் விடயங்களை முன்வைப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் இருப்பதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கொடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், எப்படியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1959 ம் ஆண்டு முதல் இராணுவ முகாம்கள் இயங்கி வருவதாகவும் தேசிய பாதுகாப்பு கருதி இந்த முகாம்களை அகற்ற கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.