பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2012


ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவாநந்தா நீதிமன்றில் நேரடியாக ஆஜராக வேண்டும்: தமிழக அரசாங்கம் கடும் நிலைப்பாடு
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, சென்னை மேல்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.
1986ஆம் ஆண்டு சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு கொலை தொடர்பில் டக்ளஸ் தேவாநந்தா தேடப்படுபராக சென்னை மேல்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று தமது சட்டத்தரணியின் ஊடாக டக்ளஸ் தேவாநந்தா தம்மீதான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் வீடீயோ மாநாடு முறைமூலம் தாம் நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்கவும் அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை இன்று நிராகரித்த தமிழக அரச சட்டவாதியும் சூளைமேட்டு காவல்துறையினரும் டக்ளஸ் தேவாநந்தா, நீதிமன்றத்தை அவமதிப்பதாக குற்றம் சுமத்தினர்.
நீதிமன்றத்தில் இன்று தமது வாதத்தை முன்வைத்த தமிழக மேலதிக சட்டவாதி பகவதி, ஆனந்தன் என்றழைக்கப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா,1986 ஆம் ஆண்டு சூளைமேட்டு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் டக்ளஸ் தேவாநந்தா என்ற ஆனந்தன் அரசவை ஒன்றில் அங்கம் வகிக்கிறார். இந்தநிலையில் அவர் தாம் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க உரிய காரணங்களை வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து விசாரணையை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.