பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2012



பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது









பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சஹானா. சென்னை மகளிர் விடுதி ஒன்றில் தங்கி, தன்னை ஒரு வழக்கறிஞராக கூறிக்கொண்டு கேரளம், தமிழகம் மாநிலங்களில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமறைவாக இருந்த இவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடாகாவின் பெங்களூரு புறநகரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர் என்றும், இரவோடு இரவாக சென்னை கொண்டுவந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படங்கள்: அசோக்