பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2012


கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ.வின் பக்கமே என்பதை தேர்தலில் நிரூபித்துள்ளனர்: அரியநேந்திரன்
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கமா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமா? உள்ளனர் என்பதை நிரூபித்துக் காட்டவே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது
. இதில் தமிழ் மக்கள் அற்ப சொற்ப சலுகைக்கு சோரம் போகாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே உள்ளோம் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். 
 

 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தெரிவான 11 உறுப்பினர்களுக்குமான பதவிப் பிரமாண நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பா. அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எனவே, தெரிவாகாமல் இருக்கின்ற ஏனையவர்களும் தெரிவான உறுப்பினர்களுடன் இணைந்து, எதிர்காலத்தில் எமது இன விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முழு மூச்சாக செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.