பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2012

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முகாம் பகுதியில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.