பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2012

.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன்  ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
மாணவர்கள் விசயேந்திரன், அக்பர் ஆகியோரே மிரட்டல் விட்டவர்களாவர்.  இவர்களின் இந்த செயலினால்  மதுரை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
தாசில்தார், பொலிஸார் உள்பட பலர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.