சகோதரனுக்காக பதவியை இராஜினாமா செய்யும் எஸ்.எம்.சந்திரசேன
கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
அவரது சகோதரரான மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ரஞ்சிதிற்கு வட மத்திய மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையினாலும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை ஒரே காலப்பகுதியில் வகிக்க முடியாது என்ற காரணத்தினாலுமே இவர் இம்முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.