பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2012


யாழ். கொக்குவிலைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
யாழ். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் மேற்கு பூநாரிமடம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சர்மிலா (வயது 31) என்ற பெண்ணே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்று இன்று வரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கடத்தப்பட்டிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறு இப்பெண்ணின் சகோதரனான குமாரசுவாமி வரதராஜா யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.