பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2012

13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய ஆதரவு கோருகிறார் அமைச்சர் விமல

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.தே. கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிரி விஜேநாயக தெரிவித்துள்ளார்.

இதேவேளை மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் விமல்வீரவன்ச 28 ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்கின்றார்.