பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012

யாழில் கடந்த கிழமை 140க்கும் மேற்பட்டோர் கைது
 
யாழ். மாவட்டத்தில் கடந்த கிழமை பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 140 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.

நீதிமன்றங்களினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 42 பேர், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேர், குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த 12 பேர், சட்டவிரோதமாக மிருகங்களை ஏற்றிச்சென்ற 6 பேர், இடையூறு உண்டாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 37 பேர், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற 3 பேர், சட்டவிரோதமான முறையில் சாரய விற்பனையில் ஈடுபட்ட 14 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.