பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2012


சர்வதேசக் கிரிக்கெட் சபையின் இருபதுக்கு20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிலிடத்தில் உள்ளது. 
உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதோடு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய அணி ஐந்து இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருப்பதோடு தொடர்ந்து இங்கிலாந்து (118), தென்னாபிரிக்கா (117), பாகிஸ்தான் (116), அவுஸ்திரேலியா (108), நியூசிலாந்து (97), பங்களாதே~; (85), அயர்லாந்து (82), ஜிம்பாப்வே (44) புள்ளிகளுடன் உள்ளன.