பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2012


கலைஞருடன் நாராணசாமி சந்திப்பு!அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை?
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் கலைஞரை இன்று (25.10.2012) சந்தித்தார்.
சென்னை சிஐடி காலனியில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் குறித்து நாராயணசாமி, கலைஞரிடம் தெரிவித்ததாகவும், அமைச்சர் பதவி குறித்து கலைஞரின் கருத்தைக் கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே அமைச்சர் பதவிக்கு திமுக சார்பில் எம்.பி.க்களின் பெயரை பரிந்துரைக்குமாறு பிரதமர் கூறிய நிலையில், அதனை கலைஞர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், வரும் ஞாயிறன்று மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது குறித்து நாராயணசாமி, கலைஞரை சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.