பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012


துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட் 

கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   
இதையடுத்து துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால்,

அவர் தலைமறைவானார். துரை தயாநிதியை பிடிக்க பிடிவாரண்ட் கோரி போலீசார் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிரானைட் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், துரை தயாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. 

இதையடுத்து துரை தயாநிதி சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று துரை தயாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, நவம்பர் 2-ம் தேதி வரை துரை தயாநிதியை கைது செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த காலகட்டத்திற்குள் துரை தயாநிதியின் மனுவுக்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கு நவம்பர் 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.