பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2012


போர் நடைபெற்றபோது 300 தொண்டு அமைப்பு உளவாளிகள் தகவல் சேகரித்துள்ளனர்


வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது களநிலைமைகளை உளவு பார்ப்பதற்காகத் தமது அமைப்பு சுமார் 300 பேரை நியமித்திருந்ததாகவும் இவர்களில் 95 சதவீதமானோர்
  சிறிலங்காவைச் சேர்ந்தவர்களே என்றும் கெயார் அமைப்பின் முக்கியஸ்தரான நீல்ஸ் மோர்சஸ் தெரிவித்துள்ளார் என திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வன்னி யுத்த நடவடிக்கைகளை உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுக்கு செய்மதி தொலைத்தொடர்புக் கருவிகளும் வழங்கப்பட்டிருந்தன. அவர்களால் வழஙகப்படும் தகவல்களைச் சேகரித்துக் கொள்ளும் வகையில் இந்த அமைப்பின் முக்கிய அதிகாரி இலங்கையில் செயற்பட்டார்.

நோர்வேயைச் சேர்ந்த கெயார் அமைப்பின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்டவரே நீல்ஸ் மோர்சஸ் என்றும் இந்த விவகாரம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள இரகசியத் தகவல் பரிமாற்றத்
தின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் திவய்ன தெரிவித்துள்ளது.
வன்னி யுத்த கள இரகசியத் தகவல்களை திரட்டிய  நோர்வே அதிகாரி ஒருவரை சிறிலங்காஅரசாங்கம் நாடு கடத்தியிருந்தது என்றும் திவயின கூறுகிறது.