பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2012


ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மூன்று வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கை பெண்கள் பலி
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்த 3 வயது குழந்தை ஒன்றை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புஜய்ரா – டிப்பா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை தவரி நீச்சல் தடாகத்தில் விழும் போது, விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் பக்கத்தில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இலங்கை பெண்கள் இருவரும் தடாகத்தில் குதித்து, குழந்தையை காப்பாற்ற முற்பட்டுள்ளனர். எனினும் குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பெண்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.