பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்

டென்மார்க் ஓபன்  பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியான் செங்கை சந்தித்தார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சாய்னா 21-17, 21-8  என்ற கணக்கில் ஜூலியான் செங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
 
 
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா, இரண்டு மாதகால இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கி டென்மார்க் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் சாய்னா வென்றுள்ள 16-வது பட்டம் இதுவாகும். மேலும், இந்த வருடத்தில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகவும் இது அமைந்தது.