பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2012

இராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தமிழர்கள்; கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார் முதல்வர்
நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
 
 
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
எமது மாணவர்களது கல்வி முன்னேற்றத்தினைப் பாராட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.
 
ஆனாலும் ஒரு காலத்தில் நாங்கள் அனைவரும் இராணுவத்தினரை எதிரிகளாகப் பார்வையிட்டோம் அந்தக் காலம் மாறி இன்று அவர்கள் எங்களுடன் இணைந்த சகோதரர்களாக, இலங்கையர்களாக ஒன்றிப் பிணைந்து வாழ்கின்ற சமூகமாக மாறி விட்டோம்.
 
நாம் ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கையர்களாக வாழப்பழகிக் கொள்வதுடன் அதே நேரம் தமிழர்களாகவும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
 
தமிழர்கள் என்பதற்காக இலங்கையர்கள் என்பதும் இல்லை. அதுபோல இலங்கையர்கள்  என்பதற்காக நாம் தமிழர்களும் அல்ல என்பதும் அல்ல.
 
அரசினால் செயற்படுத்தப்பட்டு வரும் இலவமான கல்வித்திட்டத்தில் உடைகள், உணவு, புத்தகங்கள், ஆசிரியர்கள் என அனைத்துமே எமக்கு இலவசமாக கிடைக்கின்றது.
 
எனவே நாட்டிற்காக எம்மை நாங்கள் அற்பணித்துக் கொள்வதுடன் அரசிற்கு நன்றி உடையவர்களாகவும் இருக்க வேண்டும். என்றார்.