பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2012


தமிழகத்துக்கு 5.5 டி.எம்.சி., தண்ணீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவு

 டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு 5.5. டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கூட்டத்தின் துவக்கத்தில் தமிழகத்திற்கு 8.75 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடக்கோரி, ஆணையம் முன்பு எடுத்த முடிவை அமல்படுத்துமாறு கர்நாடகாவை குழுவின் தலைவர் டி.வி. சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

பின்னர், கர்நாடக அரசு சார்பில் அம்மாநில அணைகளில் நீர் பற்றாக்குறை இருப்பது சுட்டிக்கா ட்டப்பட்டது. 

பின்னர் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி., தண்ணீரை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் திறக்கவும், ஏற்கனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய 1.5 டி.எம்.சி.,யையும் சேர்த்து 5.5. டி.எம்.சி., நீர் தர உத்தரவிடப்பட்டது. மீண்டும் ஆணைய கூட்டம் வரும் நவம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.