பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


கனேடிய அமைச்சரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்! (பட இணைப்பு)


பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் பதவி ஏற்று 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 60000 கனேடிய மக்களுக்கு Diamond Jubilee விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 14 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வைர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


இந்த விருதுகளை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்துக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் Brad Duguid வழங்கிக் கௌரவித்தார்.

இதில் சிறப்புக்குரிய விடயம் என்னவென்றால், ஒன்ராறியோ மாகாணத்தில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ரொறன்ரோவில் வசிக்கும் ஈழத் தமிழர்களாவர்.

மொன்ரி முத்துலிங்கம், மனோ கனகமணி, லோகன் ராசையா ஆகியோரே
அந்த விருது பெற்ற கௌரவத்துக்குரியவர்களாவர்.

அவர்கள் அமைச்சரின் கையால் விருது பெரும் போது எடுக்கபட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Posted ImagePosted ImagePosted ImagePosted Image