பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


நடிகை திரிஷா தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
 

நடிகை திரிஷா தந்தை கிருஷ்ணன்(68) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  கிருஷ்ணன் சென்னை ஓட்டல்களில் மானேஜராக பணியாற்றி வந்தார். திரிஷா முன்னணி நடிகையானதும் ஓட்டல் வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினர். அவர் கேட்க வில்லை.
 

சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜெனரல் மானேஜராக பொறுப்பு ஏற்றார். அங்கேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். திரிஷாவும், கிருஷ்ணனின் மனைவி உமாவும் சென்னையில் ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் வசித்தனர்.



நேற்று இரவு கிருஷ்ணனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை இறந்த தகவல் அறிந்ததும் தாய் உமாவுடன் திரிஷா சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

தெலுங்கு நடிகர், நடிகைகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு தந்தை உடலை பார்த்து கதறி அழுதார். கிருஷ்ணன் உடல் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.