பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2012


காவிரி பிரச்சினைக்காக 71 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயார் என்கிறது கர்நாடக காங்கிரஸ் 
காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவில் மொத்தம் உள்ள 71 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் கூறியுள்ளார். 


இதுகுறித்து அவர் மேலும், ’’நாங்கள் ராஜினாமா செய்ய தயாராக இருந்தாலும், பா.ஜனதா அரசு, எந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பும் எங்களுடன் ஆலோசனை நடத்துவது இல்லை.

பா.ஜனதா எம்.பி.க்களுடன் சேர்ந்து பிரதமரை சந்தித்த முதல்–மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் எம்.பி.க்களையும் அழைத்துச் சென்று இருக்கலாம்’’என்று தெரிவித்துள்ளார்.