பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2012


யாழ். நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் தொலைத்தொடர்பு கோபுர தீ விபத்து
.இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்.சட்டநாதர் கோயிலடியிலுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது பொது மக்கள் இது தொடர்பில் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தீயணைப்புப் பிரிவினர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் பாரிய இழப்பீடுகள் எவையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.