பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2012

இன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு தொடக்கம அனைத்து வானொலி பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் மாற்றப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு தெரிவிக்கையில்,45 வரையான பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளின் அதிர்வெண்களை மாற்றி அமைப்பதுடன் மேற்படி 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெஹா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்யப்படும்.
 

இம் மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் இடம்பெறவுள்ளன. இதேவேளை, இப்புதிய திருத்தத்தின்படி தொழில்நுட்பக்கோளாறுகளைக் குறைப்பதுடன் இலங்கையின் எப்பகுதியிலும் தெளிவான வானொலி ஒலிபரப்பை பெறக்கூடியதாக இருக்குமென ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில வானொலிச்சேவைகள் ஒன்றுக்கு மேற்பட்;ட அலைவரிசைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக புதிய வானொலிச்சேவைகளுக்கு அலைவரிசைகளை ஒதுக்கமுடியாதுள்ளது. இதன் காரணமாக நாளை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவால் ஒரு வானொலிச்சேவைக்கு இரு அலைவரிசைகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.