பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012


மதுரை ஆதீன பொறுப்பில் இருந்து நித்தி ராஜினாமாவா?
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.   அவர் அடுத்த மதுரை ஆதீனம் ஆகக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று நித்தியானந்தா, மதுரை ஆதீன மட பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார் என்று செய்தி பரவியது.

திருவண்ணாமலையில் கடந்த 20 நாட்களாக தங்கியி ருக்கும் நித்தியிடம் இது குறித்து பதில் கேட்க செய்தி யாளர்கள் முற்பட்டனர். 

ஆனால் ,  நித்தி இது குறித்து செய்தியாளர்க்ளை சந்திப் பதை தவிர்த்து விட்டார்.   அவரது உதவியாளர்கள்,  ராஜினாமா செய்யப்போகிறார் என்பது வதந்தி.  அவர் ராஜினாமா செய்யவில்லை என்றனர்.