பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2012


திவிநெகுமவுக்கு எதிராக கூட்டமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக ஹெல உறுமய மனுத்தாக்கல்
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, எதிராக ஓர் எதிர் மனுவைத் தாக்கல் செய்ய ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவி நெகும சட்ட மூலம் தொடர்பில், வடமாகாண ஆளுனர் சார்பான கருத்து வெளியிட முடியாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜாவினால், மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு எதிராகவே உறுமயவினால் இம் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அதனை உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தாக்கல் செய்யயுள்ளார் எனவும் ஹெல உறுமய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.