பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012

ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: ஜே.வி.பி.

நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் பலர் அங்கம் விகிக்கின்றனர். எனவே, சரத் பொன்சேகா ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்து கொள்வதென்பது அவரது தனிப்பட்ட கொள்கையாகும் என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார். 

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.