பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012


சரத் பொன்சேகாவின் பேரணியில் பங்கேற்றதால், மூவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்காகவே ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஐதேக வின்  பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பி.தேவரப்பெரும மற்றும் ஏ.அபேசிங்க ஆகியோரே தற்காலிகமாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.