பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2012


சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய திருமணமாகாத முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளிகளின் வீடுகளுக்கே இவர்கள் இரவு நேரங்களில் சென்று, குறிப்பிட்ட அந்த பெண் அங்கு உள்ளாரா என சோதனை செய்வதுடன் சிலரை தங்களுடைய முகாமிற்கு விசாரணைக்காக வருமாறும் அழைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய முன்னாள் ஆண் போராளிகளை சோதனை செய்ய அவர்களின் வீடுகளுக்கு பகல் நேரங்களில் செல்கின்ற இராணுவத்தினர், பெண் போராளிகளின் வீடுகளுக்கு மாத்திரம் இரவு நேரங்களில் செல்வதானது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.