பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012



நெட்டில் ஆபாச படம் பாடகி சின்மயி புகார் பேராசிரியர் கைது?

இன்டர்நெட்டில் ஆபாச படம் வெளியிட்டதாக பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் கைது செய்யபடுவார் என்று தெரிகிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் சின்மயி.
தமிழ் உள்பட 7 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். டுவிட்டர் இணையதளத்தில் தனது படத்தை போல ஆபாசமாக சித்தரித்து படம் வெளியிட்டிருப்பதாக புகார் கூறினார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் சின்மயி. இதில் கல்லூரி உதவி பேராசிரியர் உள்பட 6 பேருக்கு தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், துணை பேராசிரியர் சரவணகுமார், அவரது நண்பர் ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று மாலை இருவரும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.