பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012


காலையில் கட்சி பொறுப்பு பறிப்பு: மாலையில் அமைச்சர் பொறுப்பு பறிப்பு: ஜெ.அறிவிப்பால் சி.வி.சண்முகம் அதிர்ச்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் இன்று (03.10.2012)காலை விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ஆர்.லட்சுமணன் நியமிக்கப்படுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா  அறிவித்தார். 

இந்த நிலையில் இன்று மாலை  சட்டம் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சி.வி. சண்முகம் நீக்கப்பட்டுள்ளார்.

காலையில் கட்சியின் மாவட்ட பொறுப்பு பறிக்கப்பட்டதும் அட்செட்டில் இருந்த சி.வி.சண்முகத்துக்கு, மாலையில் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.