பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2012

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஆன்டி முர்ரே இறுதி போட்டிக்குத் தகுதி
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு அரை இறுதிப்போட்டியில் பெடரர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார். இதில் ஆன்டி முர்ரே 6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
 
ஆன்டி முர்ரே இறுதிப்போட்டியில் நோவக் டிஜோகோவிக்கை சந்திக்கிறார். கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் முர்ரே, டிஜோகோவிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.