பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012


தமிழக காவல்துறை இயலுமை குறித்து சந்தேகம்!- அமைச்சர் டக்ளஸின் சட்டத்தரணி!
சூளைமேடு கொலை வழங்கின் விசாரணையில், தமது கட்சிக்காரரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னிலையாக முடியும் என்று அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனினும், தமிழக காவல்துறையின் பாதுகாப்பு இயலுமை குறித்து சந்தேகம் உள்ளதாக, சட்டத்தரணி பீ.என்.பிரகாஷ் சென்னை மேல்நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சூளைமேட்டு கொலை வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது, முன்னிலையான அமைச்சரின் சட்டத்தரணி, தமிழக காவல்துறையினர், விசாரணைகளில் ஸ்கொட்லோன்ட் யாட் காவல்துறையினருக்கு இணையாவர்கள். இருந்தபோதும், பாதுகாப்பு எனும் போது அவர்கள் அதில் முழுமை பெறவில்லை.
இதற்கு 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு உதாரணமாகும். இதன்போது, தமிழகத்தின் பல காவல்துறையினரும் கொல்லப்பட்டமையை சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனவேதான் தமது கட்சிக்காரரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்மதி காணொளி சாட்சியத்திற்கு அனுமதி கோரியதாக சட்டத்தரணி பீ என் பிரகாஷ் குறிப்பிட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது அவசியம் என்று மேலதிக அரச சட்டவாதி பிரபாவதி வலியுறுத்தினார்.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை 18ம் திகதி வழங்கப்படும் என்று சென்னை நீதிமன்றில் ஐந்தாவது மேலதிக அமர்வு நீதிபதி எஸ் ராஜகோபாலன் அறிவித்துள்ளார்.